மத்திய பாஜக அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மேற்கொண்டது.
அதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
அன்று இரவு ஊடகத்தின் வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவித்தார். இதனால் சாமானிய மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர்.
அதன்பின்னர் புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையும் படிக்க | திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரிய மனு தள்ளுபடி!
ஆனால், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது மக்களிடம் இருந்த ரொக்கத் தொகையைவிட அதிகமாக இருப்பதாக 2022ல் ஆர்பிஐ தெரிவித்தது.
பணமதிப்பிழப்பு அறிவிக்கும்போது மக்களிடம் 17. 7 லட்சம் கோடி ரூபாய் ரொக்கமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி நிலவரப்படி 30.88 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனிடையே மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் 2023 ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.