கோப்புப் படம் 
இந்தியா

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காதலன்!

கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரில் சிறுவர் உள்பட 6 பேர் கைது

DIN

ஒடிஸாவில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் தசரா பண்டிகையின்போது, 19 வயதான கல்லூரி மாணவியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அந்தப் பெண்ணை ஓர் உணவு விடுதிக்கு அவரது காதலன் அழைத்திருந்தார். அங்கு சென்ற பெண்ணை, விடுதியின் உரிமையாளருடன் சேர்ந்து அவரது காதலனும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அதனை விடியோவாக பதிவு செய்து, பெண்ணை மிரட்டி, சிறுவர் உள்பட 4 நண்பர்களுடன் சேர்ந்து, தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இறுதியாக அவர்கள் 6 பேரும் மீது அந்தப் பெண், காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பெண்ணின் காதலன், அவரது 4 நண்பர்கள் உள்பட விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 29 நக்சல்கள் சரண்!

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்வு! அமைச்சர் அன்பில் மகேஸ்

ரோட்டர்டம் திரைப்பட விழாவுக்குத் தேர்வான பராசக்தி!

பஞ்சாப் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!

டிரம்ப், நெதன்யாகுவுக்கு சவப்பெட்டி... ஈரானுக்கு ஆதரவாக லடாக்கில் போராட்டம்!

SCROLL FOR NEXT