இந்தியா

அண்ணனின் நகல்..! பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதரர் புகைப்படம் வெளியீடு!

சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதரர் புகைப்படத்தை அவரது பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.

DIN

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதர் புகைப்படத்தை அவரது பெற்றோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா (27) மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 6 மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கின் முதல் கட்டமாக 8 பேரை கைது செய்து விசாரித்து வந்த காவல்துறை பின்னர் பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்தனர். 

மூஸேவாலாவின் பெற்றோர் தங்கள் இளைய மகன் சுப்தீப்பின் அழகான படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

கடந்த மாதம் மார்ச் 18 ஆம் தேதி மூஸேவாலாவின் பெற்றோருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் புகைப்படத்துடன் பெற்றோர் புகைப்படங்களுடன் கூடிய விடியோவை பகிர்ந்துள்ளனர்.

மூஸேவாலாவின் பெற்றோர் அவர்களுக்கு மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். மூஸேவாலாவின் தாயார் சரண் கௌர் 58 வயதில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மேலும் சரண் கௌர் செயற்கை கருத்தரித்தல் வழியாக கர்ப்பமானது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலான விடியோவைப் பார்த்த இணையதளவாசிகள் அண்ணனின் நகல் போல தம்பி இருப்பதாக நெகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT