முகப்பு
பிரதமர் மோடி பிரசாரம்
இந்தியா

மகாராஷ்டிரத்தில் பிரதமர் மோடி: அனல் பறக்கிறது பிரசாரம்

மகாராஷ்டிரத்தில் பிரதமர் மோடி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியா

மகாராஷ்டிரத்தில் பிரதமர் மோடி: அனல் பறக்கிறது பிரசாரம்

மகாராஷ்டிரத்தில் பிரதமர் மோடி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Updated On : 8 நவம்பர், 2024 at 9:28 AM
பிரதமர் மோடி பிரசாரம்
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தொடர்ந்து 9 பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி, வெள்ளிக்கிழமை துலேவில் முதல் பிரசாரக் கூட்டத்தைத் தொடங்கினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மகாயுதி அரசின் கீழ், தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் பல முன்னேற்றங்களை அடையும் என்று உறுதி அளித்திருக்கும் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை பற்றி பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

மகாயுதி அரசுதான், மகாராஷ்டிர மாநிலத்துக்குத் தேவையான அனைத்து முன்னேற்றத் திட்டங்களையும் கொடுக்கும். மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள்ளேயே இருக்கிற பிரச்னைகளை அவர்கள் சரி செய்ய முடியாமல் இருப்பதாகவும் மோடி விமர்சித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் அமளியும் மோதலும் நடந்து வருவது குறித்து காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியினரை கண்டித்துள்ளார்.

இன்று நாசிக்கில் நடைபெறும் மற்றொரு பிரசாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். நாளை அகோலா மற்றும் நாண்டெட் பகுதிகளிலும், 12ஆம் தேதி சிமுர் மற்றும் சோலாபூர் பகுதிகளிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவிருக்கிறார்.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர பேரவைக்கு, நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →