ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்டில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சனிக்கிழமையில் (நவ. 9) முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் உள்பட 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தலில் ஹவாலா பணப் பரிவர்த்தனை நடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அக்டோபர் 26 ஆம் தேதியில் ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், கொல்கத்தாவில் 35 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், சுமார் ரூ. 150 கோடி மதிப்புள்ள பினாமி சொத்து, முதலீடு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.