கோப்புப்படம். 
இந்தியா

உ.பி.: 5 நாய்க்குட்டிகளை எரித்துக்கொன்ற பெண்கள்

மீரட்டில் இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மீரட்டில் இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டின் கன்கெர்கெடா பகுதியில் தெரு நாய் ஒன்று ஐந்து நாய்க்குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த நாய்க்குட்டிகள் இரவுப் பொழுதிலும் சத்தமிட்டபடியே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

வக்ஃப் மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயற்சிக்கிறார் பிரதமர்: ஆம் ஆத்மி

இதனை தொந்தரவாக எண்ணிய 2 பெண்கள் கடந்த 5ஆம் தேதி நாய்க்குட்டிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அந்த நாய்க்குட்டிகள் ஐந்தும் உயிரிழந்தன. இதுகுறித்து கன்கெர்கெடா காவல்நிலையத்தில் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ஷோபா மற்றும் ஆர்த்தி ஆகிய இருவர் மீதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (விலங்கைக் கொன்று அல்லது ஊனப்படுத்துதல்) பிரிவு 325ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் அதிகாரி ஜிதேந்திர குமார் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டுமனைப் பட்டா கோரி கிராம மக்கள் மனு

புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

ஆவணி ஞாயிறு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருடப்படேட 82 கைப்பைசிகள் மீட்பு: இருவா் கைது

அரசினா் மருத்துவமனையில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT