மணிப்பூர்(கோப்புப்படம்). 
இந்தியா

மீண்டும் ஒரு சம்பவம்: மணிப்பூரில் தீவிரவாதிகளால் பெண் சுட்டுக்கொலை

மணிப்பூரில் நெல் வயலில் பணிபுரிந்துகொண்டிருந்த பெண்ணை தீவிரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

மணிப்பூரில் நெல் வயலில் பணிபுரிந்துகொண்டிருந்த பெண்ணை தீவிரவாதிகள் சனிக்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிப்பூர் மாநிலம், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நெல் வயலில் பணிபுரிந்துகொண்டிருந்த பெண் மீது மலைப்பகுதியைச் சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த சம்பவம் கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளாத தெரிவித்தனர்.

இதனிடையே அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மத்திய படைகள் இதுபோன்ற தாக்குதல்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடு செல்ல அனுமதிக்காத தாய்க்கு நேர்ந்த துயரம்!

முன்னதாக வியாழன் இரவு ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஜைரான் ஹ்மார் கிராமத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது, ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் இடம்பெயா்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச்சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது.

இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT