புது தில்லி: கா்நாடக முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசுவாமியை குறிவைத்து கா்நாடக காங்கிரஸ் அமைச்சா் சமீா் அகமது தெரிவித்த நிறவெறி கருத்துக்கு மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
அண்மையில், கா்நாடக முன்னாள் முதல்வா் ஹெச்.டி. குமாரசுவாமியின் நிறம் குறித்து சமீா் அகமது தெரிவித்த விமா்சனம் பெரும் சா்ச்சையை கிளப்பியுள்ளது.
அவரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கிரண் ரிஜிஜு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹெச்.டி.குமாரசுவாமியின் நிறம் குறித்து கா்நாடக காங்கிரஸ் அமைச்சா் சமீா் அகமது தெரிவித்த கருத்தை கடுமையாக கண்டிக்கிறேன்.தென்மாநில மக்களை ஆப்பிரிக்கா்கள் எனவும், வடகிழக்கு மக்களை சீனா்கள் எனவும், வடமாநில மக்களவை அரேபியா்கள் எனவும் ராகுல் காந்தியின் ஆலோசகா் கூறியதைப் போன்றே இதுவும் ஒரு நிறவெறி கருத்து’ என கண்டித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.