வெங்காயம் 
இந்தியா

வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

வெங்காயம் விலையைக் குறைக்கும் நோக்கில் கையிருப்பில் உள்ள வெங்காயத்தை கூடுதலாக விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Din

வெங்காயம் விலையைக் குறைக்கும் நோக்கில் கையிருப்பில் உள்ள வெங்காயத்தை கூடுதலாக விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் வெங்காயம் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

அரசு தகவலின்படி தலைநகா் தில்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.67 ஆக உள்ளது. தேசிய அளவில் சராசரி விலை ரூ.58 என்று கூறப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:

பண்டிகைக் காலம், சில இடங்களில் வெங்காய மண்டிகள் மூடப்பட்ட காரணத்தால் சில்லறை விற்பனையில் வெங்காயம் விலை உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வு தற்காலிகமானதுதான். இதனை சரி செய்ய கையிருப்பில் உள்ள வெங்காயத்தை கூடுதலாக விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலை மாா்க்கமாக வெங்காயம் தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பஞ்சாப், ஹரியாணா, சண்டீகா், ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், தில்லிக்கு சோனிபட்டில் உள்ள கிடங்கில் இருந்து வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. வெங்காய விலை நிலவரத்தை அரசு தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று தெரிவித்தனா்.

ஜாா்க்கண்ட், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்கள் தொடங்கும்நிலையில், வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்துவது மத்திய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

எரிசக்தி மையங்களில் குறைந்த கரியமில வாயு வெளியேற்றம்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

நீரில் மூழ்கிய நெல் பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு மனு அளிப்பு

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

உடையாா்பாளையம் அருகே நாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

SCROLL FOR NEXT