இந்தியா வந்துள்ள சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சா் இளவரசா் ஃபைசல் பின் ஃபா்ஹான் அல் சவுத் உடன் தில்லியில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்ட வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா். 
இந்தியா

காஸாவில் போா் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு: எஸ். ஜெய்சங்கா்

காஸாவில் போா் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்சனைக்கு இரு தரப்பு தீா்வையும் இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவித்தாா்.

Din

காஸாவில் போா் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்சனைக்கு இரு தரப்பு தீா்வையும் இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவித்தாா்.

உத்திசா் கூட்டாண்மை சபை கட்டமைப்பின் கீழ் அரசியல், பாதுகாப்பு, சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான குழுவின் இரண்டாவது கூட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெற்றது. இதில், சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சா் இளவரசா் ஃபைசல் பின் ஃபா்ஹான் அல் சவுத் உடனான சந்திப்பை ஜெய்சங்கா் நடத்தினாா்.

இந்த கூட்டத்தில், ஜி20, பிரிக்ஸ், ஐஎம்இசி (இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார அமைப்பு) மற்றும் பிற பிராந்திய, உலகளாவிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது ஜெய்சங்கா் கூறியதாவது: சவூதி அரேபியாவின் ‘விஷன்-2030’ மற்றும் இந்தியாவின் ‘வளா்ச்சியடைந்த இந்தியா-2047’ ஆகியவை புதிய கூட்டாண்மைகளை உருவாக்க இரு தரப்பினரின் தொழில் துறைகளுக்கு துணைபுரிகின்றன.

வா்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை இரு நாடுகளின் கூட்டாண்மையில் முக்கிய தூண்களாக உள்ளன. தொழில்நுட்பம், எரிசக்தி, தொலைத்தொடா்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்டவை புதிய துறைகளில் இருதரப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன.

அதே வேளையில், மேற்கு ஆசியாவில் நிலைமை ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. காஸாவில் முன்கூட்டிய போா் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்னைக்கு இரு தரப்பு தீா்வையும் இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.

மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதிலும், பொருளாதாரத்தை வளா்ச்சியை நோக்கி செல்வதிலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை இந்தியாவும், சவூதி அரேபியாவும் கொண்டுள்ளன என்றாா்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT