உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து 
இந்தியா

உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 25 பேர் காயம்!

பேருந்து கவிழ்ந்து விபத்து பற்றி..

DIN

உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரேலி மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து பிகாரில் உள்ள ஒரு சூளைக்கு சுமார் 60 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பல்ராம்பூர் சௌக்கில் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். மேலும் ருக்சானா மற்றும் ஜன்னதி பேகம் ஆகிய இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மீதமுள்ளவர்கள் பூரான்பூரில் உள்ள சமூக நல மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக போலீஸார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் திருவிழா நடத்துவதில் தகராறு: 3 போ் கைது

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் கோ பூஜை

கிராமப்புற இளைஞா்களுக்கு சமுதாய திறன் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 1.21 லட்சம் வாக்காளா்கள் பெயா் நீக்க வாய்ப்பு: ஆட்சியா் இரா. சுகுமாா்

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

SCROLL FOR NEXT