கோப்புப் படம் 
இந்தியா

தில்லி காற்று மாசு: 107 விமானங்கள் தாமதம்! 3 விமானங்கள் ரத்து!

தில்லியில் தொடர்ந்து வரும் காற்று மாசால் 107 விமானங்கள் தாமதமாகவும், 3 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.

DIN

தில்லியில் தொடர்ந்து வரும் காற்று மாசால் 107 விமானங்கள் தாமதமாகவும், 3 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.

தில்லியில் தொடர்ந்து 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் (நவ. 17) காற்றின் தரம் மோசமான நிலையில், காலை 7 மணியளவில் 428-ஆக இருந்தது. கடுமைப் பிரிவில் இருக்கும் தில்லியின் காற்றின் தரத்தால், பெரும்பாலான பகுதிகளில் புகைமூட்டமாகக் காணப்படுகிறது. இந்த நிலையில், தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 107 விமானங்கள் தாமதமாகவும் செயல்பட்டன.

தில்லியில் ஆனந்த் விஹார், அசோக் விஹார், பவானா, முண்ட்கா, ஷாதிபூர், விவேக் விஹார், வஜீர்பூர் முதலான 7 பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை காலையில், காற்றின் தரம் `மிகக் கடுமையானப்’ பிரிவில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

கோப்புப் படம்

தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிகவும் மோசமானது. தீபாவளிக்கு பட்டாசுகள் விற்பனை செய்ய, வெடிக்க தடை விதித்தும் அங்கு காற்று மாசு அதிகரித்துக் காணப்பட்டது. சாலைகளில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முறையாக சுத்திகரிக்கப்படாத தொழில்துறை கழிவுகள், கழிவுநீர் வெளியேற்றம், வாகனங்களின் உமிழ்வு, அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது உள்ளிட்டவற்றால் தில்லியில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது.

காற்று மாசினால் இருமல், தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. தில்லியில் தற்போதுள்ள காற்று மாசு 25-30 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம் என்கின்றனர்.

பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரமாக தில்லி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூப்பனாா் பிரதமராவதைத் தடுத்தனா்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்: ராகுல் காந்தி

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை: கடையடைப்பு

SCROLL FOR NEXT