மத்தியப் பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த சகோதரர்களுக்கு இடையேயான மோதலில் ஒருவர் பலியானார்.
மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டத்தில் இந்திரா நகரில் சகோதரர்களான குல்தீப், அன்ஷுல் யாதவ், அமன் மூவரும் மதுபோதையில் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், மது விருந்து கொண்டாடலாம் என்று சகோதரர்களிடம் அன்ஷுல் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இரவு நேரம் என்பதால், கடைகள் எதுவுமில்லாததையடுத்து, இறைச்சி வாங்கி வீட்டிலேயே கொண்டாடலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், வீட்டிற்குள் இறைச்சி கொண்டு வரக்கூடாது என்று அன்ஷுலின் சகோதரர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் மூவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியது. தொடர்ந்து, மதுபோதையில் இருந்த அவர்கள், அன்ஷுலின் கழுத்தை கயிறைக் கொண்டு நெரித்ததால், அன்ஷுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிக்க: நோயாளியின் கண்ணைத் தின்ற எலி? மருத்துவர்கள் அலட்சியம்!
இருப்பினும், அன்ஷுலை அவரது தாயார் அனிதா உள்பட 2 சகோதரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அன்ஷுல் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் மயக்கமடைந்ததாக மருத்துவர்களிடம் அவர்கள் பொய் கூறியுள்ளனர்.
இருப்பினும், அன்ஷுலின் கழுத்தில் கயிறால் நெரித்த தடம் இருப்பதைக் கண்ட மருத்துவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கொலை செய்த சகோதரர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற அன்ஷுலின் தாயார், காவல்துறையினரிடமும் அதேபோல் பொய் கூறினார்.
தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இறுதியாக கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மேலும், மறைத்து வைக்கப்பட்டிருந்த கயிறும் கண்டுபிடிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.