குஜராத்தில் சம்பவம் 
இந்தியா

இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்கு.. 5 நாள்களுக்குப் பின் திரும்பியவர்! அதிர்ச்சியில் குடும்பம்

இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்கு நடந்து 5 நாள்களுக்குப் பின் திரும்பியவர்! அதிர்ச்சியில் குடும்பம்

DIN

அகமதாபாத்; குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே விஜபூரைச் சேர்ந்த பிரிஜேஷ் சுதர் இறந்துவிட்டதாக நினைத்து அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்த 5 நாள்களுக்குப் பின் அவர் உயிரோடு திரும்பியதால், குடும்பத்தினர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.

திரும்பியதால் ஆனந்தமும், வேறு யாரோ ஒருவருடைய உடலுக்கு இறுதிச் சடங்கு செய்திருக்கிறோம் என்பதால் அதிர்ச்சியும் அடைந்தனர்.

அக். 27ஆம் தேதி பிரிஜேஷ் சுதர் (43) காணாமல் போனார். கடுமையான கடன் சுமையில் இருந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றே குடும்பத்தினர் அஞ்சினர். இந்த நிலையில், சபர்மதி ஆற்றில் இருந்து ஒரு சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரிஜேஷ் குடும்பத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

பிரிஜேஷ் குடும்பத்தினரும், அந்த உடலைப் பார்த்து அது பிரிஜேஷ் என்று அடையாளம் சொல்லி வீட்டுக்கு எடுத்துச் சென்று நவ. 10ஆம் தேதி இறுதிச் சடங்குகள் செய்தனர். கிட்டத்தட்ட 5 நாள்களுக்குப் பிறகு, விஜப்பூரில் உள்ள வீட்டுக்கு பிரிஜேஷ் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஒட்டுமொத்த குடும்பமும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர்.

உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதனால், பிரிஜேஷ் காணாமல் போன வழக்கு முடித்துவைக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் கிடைத்த நபர் யார், எப்படி உயிரிழந்தார் என்பது பற்றிய விசாரணைகள் காவல்துறைக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT