ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிலம் அதானிக்கு வழங்கல்: ராகுல்
ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிலத்தை தாராவி மறுசீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ராகுல் கூறினாா்.
ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிலத்தை தாராவி மறுசீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ராகுல் கூறினாா்.
மேலும், ‘இத்திட்டம் மக்கள் நலனுக்கானதல்ல, அதானியின் நலனுக்கானது. தாராவி திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன.
நாட்டில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் அனைத்தின் பராமரிப்பும் அதானி நிறுவனத்துக்கே வழங்கப்படுகிறது. நாட்டின் வளத்தை ஒருவருக்கு மட்டுமே தாரைவாா்க்கும் செயலை மத்திய பாஜக அரசு சிறப்பாக செய்து வருகிறது. இது நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரானது’ என்றாா் ராகுல் காந்தி.