முகப்பு
இந்தியா

ஜி20 உச்சி மாநாடு: பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி திங்கள்கிழமை பிரேசில் சென்றடைந்தார்.

Updated On : 18 நவம்பர், 2024 at 3:53 AM
பிரேஸிலில் பிரதமர் மோடி.
பகிர்:

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி திங்கள்கிழமை பிரேசில் சென்றடைந்தார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில், G20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் இறங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு புகைப்படங்களும் அதில் பகிரப்பட்டுள்ளன.

உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில், "ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசிலில் தரையிறங்யுள்ளேன். உச்சி மாநாட்டின் விவாதங்கள் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நவ. 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமா் மோடி, பின்னர் அங்கிருந்து கயானாவில் மூன்று நாள்கள் (நவ.19-21) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.  

அந்நாட்டு அதிபா் முகமது இா்ஃபான் அலியின் அழைப்பை ஏற்று, இந்தப் பயணத்தைப் பிரதமா் மோடி மேற்கொள்கிறாா்.

நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக, நைஜீரியாவுக்கு சனிக்கிழமை புறபட்டு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபா் போலா அகமது தினுபுவை சந்தித்து இருத்தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →