ராகுல் காந்தி 
இந்தியா

இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உடைப்போம்: ராகுல் காந்தி

ஜாதிக் கணக்கெடுப்புதான் நம் முன் உள்ள மிகப்பெரிய பிரச்னை..

DIN

மகாராஷ்டிரத்தில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, நாட்டில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உறுதியளித்தார்.

இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராகுல் கூறியதாவது,

ஜாதிக் கணக்கெடுப்புதான் நம் முன் உள்ள மிகப்பெரிய பிரச்னை. அதுதான் எங்களின் மைய தூண், அதை நாம் செய்து முடிப்போம் என்று அவர் கூறினார்.

நவம்பர் 20 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை சித்தாந்தங்களின் போர் என்றும், சில பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சண்டை என்றும் அவர் கூறினார்.

ஃபாக்ஸ்கான், ஏர்பஸ் உள்ளிட்ட ரூ.7 லட்சம் கோடி திட்டங்கள் மகாராஷ்டிரத்தில் இருந்து குஜராத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழக்க நேரிட்டது.

மும்பையில் தாராவி மறுவடிவமைப்பு திட்டத்தில் ஒருவருக்கு உதவுவதற்காக முழு அரசும் செயல்பட்டது. மகாராஷ்டிரா மக்களை விடத் தொழிலதிபர் கெளதம் அதானியின் நலன்களுக்கு ஆளும் கட்சியும், பாஜகவும் முன்னுரிமை அளிக்கின்றது.

மோடி மற்றும் அதானி ஒன்றாக இணைந்து பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்தியாவின் அனைத்து துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஒருவருக்கு மட்டுமே செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT