கோப்புப் படம் 
இந்தியா

மகாராஷ்டிரம்: வாக்குச்சாவடி மையத்தில் மாரடைப்பால் வேட்பாளர் பலி!

வாக்குச் சாவடியில் மாரடைப்பு ஏற்பட்டு பீட் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பாலாசாகேப் ஷிண்டே உயிரிழப்பு

DIN

மகாராஷ்டிரத்தில் பீட் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பாலாசாகேப் ஷிண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (நவ. 20) நடைபெற்ற நிலையில், பீட் தொகுதியில் உள்ள சத்ரபதி ஷாஹு வித்யாலயா வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்ற பீட் தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் பாலாசாகேப் ஷிண்டேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர் சத்ரபதி ஷம்பாஜி நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடலை உடற்கூறாய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி, தேர்தலின்போது ஒரு வேட்பாளர் இறந்தால், சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்களிப்பதை பிரிவு 52-ன் கீழ் ஒத்திவைக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT