தில்லி எய்ம்ஸ் கோப்புப்படம்
இந்தியா

தில்லி எய்ம்ஸில் எம்ஆர்ஐ ஸ்கேனுக்கான காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள்!!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்கேனுக்கான காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள் கொடுக்கப்பட்டது பற்றி...

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்வதற்காக சென்ற நோயாளிக்கு 3 ஆண்டுகள் கழித்து தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

தில்லியை சேர்ந்த ஜெய்தீப் தே (வயது 52) என்பவர் வலது கால் காயத்துக்கு சிகிச்சைப் பெறுவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு சென்றுள்ளார்.

ஆனால், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்கான தேதி 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 15,000 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு எம்.ஆர்.ஐ., எக்ஸ் ரே ஸ்கேன் போன்றவை எடுக்கப்படுகிறது.

இதனால், புறநோயாளிகளுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களில் இருந்து 3 ஆண்டுகள் வரை உள்ளதாக மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜெய்தீப் கூறுகையில், “தில்லி மற்றும் வலையப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ரூ. 25,000 வரை கேட்கின்றனர், ரூ. 5,000 கூட செலவழிக்க முடியாது நிலையில் நான் உள்ளேன். என்ன செய்வதென்று தெரியாததால், ஸ்கேன் எடுக்கும் முடிவையே கைவிட்டுவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரூ. 2,000 முதல் ரூ. 3,000-க்குள் குறைந்த எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை தரப்பில் கூறுகையில், “ஸ்கேன் எடுக்க அதிகளவிலான நோயாளிகள் வருவதால் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் உடனடி ஸ்கேன் தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப பிற உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு காத்திருப்பு காலம் வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT