முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி! 
இந்தியா

தில்லி பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி!

தில்லி பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!

DIN

புது தில்லி: தில்லி பேரவைத் தேர்தல் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.

தில்லி பேரவைத் தேர்தலுக்கான 11 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, இந்த 11 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் யாரும் இல்லை என்று கட்சித் தலைவர் கோபால் ராய் கூறியிருக்கிறார்.

இந்த முதல் வேட்பாளர் பட்டியலில், பாஜக தலைவர்கள் பிராம் சிங் தன்வார், அனில் ஜா, பி.பி தியாகி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சௌத்ரி சுபைர் அகமது, வீர் திங்கன், சுமேஷ் ஷோகீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தில்லி பேரவைக்கு வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்ற பெற முடியவில்லை. தொடர்ந்து அரவிந்த் கேஜரிவால் தில்லி முதல்வரானார்.

ஆனால், அரவிந்த் கேஜரிவால் ஆட்சியில், பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. இறுதியாக தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் மாதம் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டார். இதன் மூலம், முதல்வராக இருக்கும்போது ஒருவர் கைதாவது இதுவே முதல்முறை என்று கூறப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

SCROLL FOR NEXT