பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியுள்ளது குறித்து..
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக இன்று (பிப். 24) வழங்கியுள்ளது. இதில், நேரடியாகப் போட்டியிடுவதற்காக 30 முதல் 35 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் இந்தப் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது. தேர்தலையொட்டி கடந்த ஆண்டே இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான தங்கள் விருப்பத்தை அதிமுகவிடம் பாஜக தெரிவித்துள்ளது.
தேர்தலில், பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று (பிப். 24) வழங்கினர்.
இதில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 72 தொகுதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இவற்றில் 30 - 35 தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டுள்ளது. இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, ஆவடி, காஞ்சிபுரம், தளி, ஆலங்குளம், தென்காசி தொகுதிகளையும் பாஜக கோரியுள்ளது.
மேலும், வாக்குகள் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் திருவண்ணாமலை, சிங்காநல்லூர், அரவக்குறிச்சி, பழநி விளவங்கோடு, நாகர்கோவில், ஆலங்குளம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடவும் பாஜக விருப்பம் தெரிவித்துள்ளது.
TN Assembly elections: BJP asking for 35 seats from AIADMK?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.