கேஜரிவாலின் இல்லம் முன்பு பாஜகவினர் போராட்டம் 
இந்தியா

கேஜரிவால் வீடு முன் பாஜகவினர் போராட்டம்!

அரசு பங்களாவை சீரமைப்பதில் நடைபெற்ற முறைகேடு பற்றி..

DIN

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அரசு பங்களாவைப் புனரமைத்ததில் முறைகேடு செய்தாக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 150 நாள்கள் திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுதலையான முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். அதன்பின்னர், தில்லியின் முதல்வராக அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக தான் தங்கியிருந்த அரசு பங்களாவை கேஜரிவால் காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பிளாக்ஸ்டாப் தெருவில் உள்ள ஷேஷமஹால் இல்லத்துக்கு புதிதாகக் குடியேறினார்.

இந்த நிலையில், அரசு பங்களாவில் கேஜரிவால் தங்கியிருந்தபோது பங்களாவை சீரமைப்பதற்காக ஆடம்பரமான விலையுயர்ந்த பொருள்கள் வாங்கப்பட்டதாகவும். இதற்கு பொதுப்பணித்துறை உரியக் கணக்கு வழங்கப்படவில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

கேஜரிவால் தற்போது தங்கியுள்ள இல்லம் அருகே பாஜக எம்பிக்கள், கட்சியின் தில்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்திர குப்ரா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த தில்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்டும் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் போராட்டம் நடத்திய பாஜகவை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT