MANISH SISODIA123402.JPG
Center-Center-Delhiபணமோசடி வழக்கில் பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரிய மணீஷ் சிசோடியாவின் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்குகளில் முன்னாள் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்தநிலையில் ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் விசாரணை அதிகாரியிடம் திங்கள் மற்றும் வியாழன்தோறும் ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தக்கோரிய ஆம் ஆத்மி தலைவர் மனு அளித்திருந்தார். இந்த மனுக்களை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு சிசோடியாவின் விண்ணப்பங்கள் குறித்துப் பதிலளிக்குமாறு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இடி) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த ஆகஸ்ட் 9ல் உச்ச நீதிமன்றம் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது. விசாரணையின்றி 17 மாதங்கள் சிறையில் அடைத்தது. மேலும் விசாரணை அதிகாரியிடம் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10-11 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, சிசோடியா சார்பின் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் விசாரணை அதிகாரிகள் முன்பு 60 முறை ஆஜராகியுள்ளார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து சிசோடியாவின் பிணை நிபந்தனையை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள நிலையுல், இதுதொடர்பாக பெஞ்ச் அடுத்த தேதியில் பதிலளிக்கும் என்று கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.