முகப்பு
இந்தியா

மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக டி கிருஷ்ணகுமார் பதவியேற்பு

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் எட்டாவது தலைமை நீதிபதியாக நீதிபதி டி கிருஷ்ணகுமார் வெள்ளிக்கிழமை பதவியேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 22 நவம்பர், 2024 at 3:31 PM
டி கிருஷ்ணகுமார்
பகிர்:

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் எட்டாவது தலைமை நீதிபதியாக நீதிபதி டி கிருஷ்ணகுமார் வெள்ளிக்கிழமை பதவியேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்பாலில் உள்ள ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 48 மணி நேரத்திற்குள் அவர் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.

Advertisement

ஓய்வு பெற்ற நீதிபதி சித்தார்த் மிருதுலுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டார். நீதிபதி டி கிருஷ்ணகுமார் முன்பு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.

புதிய தலைமை நீதிபதிக்கு முதல்வர் என் பிரேன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.