கோப்புப் படம் 
இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தல்: 6-ல் 3 தொகுதிகள் திரிணமூல் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 6 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை

DIN

மேற்கு வங்க இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் 6 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

நைஹாதி, ஹரோவா, மேதினிபூர், தல்தங்ரா, சிதை (எஸ்சி), மதரிஹத் ஆகிய 6 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ. 23) காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 3 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற்ற 6 தொகுதிகளில் 5 தொகுதிகள் திரிணமூல் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நவ. 13 ஆம் தேதியிலேயே ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2, கேரளம், சத்தீஸ்கா், மேகாலயம், குஜராத்தில் தலா ஒரு தொகுதி என 33 பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிரத்தில் உள்ள நாந்தேட் மக்களவை தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, உத்தரகண்ட் மற்றும் கேரளத்தில் தலா ஒரு தொகுதி என 15 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

SCROLL FOR NEXT