ஜார்க்கண்ட் தேர்தல் பிடிஐ
இந்தியா

என்ன நடக்கிறது ஜார்க்கண்டில்.. மாறி மாறி முந்தும் கூட்டணிகள்!

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் தற்போது இந்தியா கூட்டணி முன்னிலை

DIN

ஜார்க்கண்ட் மாநில பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் கட்சியே ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 5 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஹேமந்த் சோரன் கட்சி தலைமையிலானா கூட்டணி 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால், கிட்டத்தட்ட வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவே கூறப்படுகிறது.

பாஜக மொத்தம் 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதில் 27 இடங்களிலும் அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் ஒரு இடத்திலும் ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்திலும் லோக் ஜனசக்தி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2000-இல் ஜாா்க்கண்ட் உருவானதில் இருந்து பேரவைத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.

மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன.

முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் (பா்ஹைத்), அவரது மனைவி கல்பனா சோரன் (கண்டே), மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி (தன்வா்), அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ (சில்லி) உள்பட மொத்தம் 1,211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

கடந்த தோ்தலில் நடந்தது என்ன?

ஜாா்க்கண்டில் கடந்த 2019, பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 30 இடங்களில் வென்றது. அக்கட்சி தலைமையிலான கூட்டணி 47 இடங்களுடன் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 25 இடங்களே கிடைத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT