கோப்புப்படம். 
இந்தியா

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 2 டிரோன்கள் கண்டுபிடிப்பு

பஞ்சாபின் அமிர்தசரஸில் சர்வதேச எல்லைக்கு அருகில் இரண்டு ஆளில்லா விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

DIN

பஞ்சாபின் அமிர்தசரஸில் சர்வதேச எல்லைக்கு அருகில் இரண்டு ஆளில்லா விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இரண்டு டிரோன்களும் ஒரு ஹெராயின் பாக்கெட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

570 கிராம் ஹெராயின் அடங்கிய பொட்டலத்துடன் டிரோன் ஒன்று தவோகி கிராமம் அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து சனிக்கிழமை கைப்பற்றப்பட்டது.

பாகிஸ்தானில் மொபைல், இணைய சேவைகள் முடக்கம்!

தொடர்ந்து அதே நாளில் மற்றொரு டிரோன் ஒன்றும் மஹாவா கிராம அருகே ரோந்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படையினரால் வயல்வெளியில் இருந்து மீட்கப்பட்டது.

இரண்டு டிரோன்களும் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப எதிர் நடவடிக்கைகளால் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஊகிக்கப்படுவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

பஞ்சாப் எல்லையில் இருந்து வெளிநாட்டு டிரோன்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.45,000 சம்பளத்தில் இந்தியன் ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இதயத்தில் துளைகளுடன் பிறக்கும் குழந்தைகள்! காரணம் என்ன?

ஐசிசி தரவரிசை: ரோஹித்தை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம்! 4 ஆண்டுகளுக்குப் பின்!

பொங்கல் விடுமுறை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

என்.சி.இ.ஆர்.டி-இல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT