மகாராஷ்டிரத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து சிதைந்த நிலையில் இரண்டு உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அஸ்தி வட்டத்தின் காட் பகுதியில் ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலியானவர்கள் அஹில்யநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிலேஷ் நாராயண் கோங்ரே (26) மற்றும் தினகர் நானா காட்ஷிங் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், கோங்ரே பெலாப்பூர் (குர்த்) பகுதியையும் காட்ஷிங் (65) பதார்டி தாலுகாவில் உள்ள பில்வாடா கிராமத்தையும் சேர்ந்தவர்கள். கோங்ரே ஒரு மாதத்திற்கு முன்பு மச்சிந்திரநாத் கோயிலுக்குச் சென்றார். ஆனால் அதன் பிறகு காணாமல் போனார்.
அவரது குடும்பத்தினர் முன்னதாக அம்போரா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்திருந்தனர் என்றார். முதற்கட்ட விசாரணையில், கரடுமுரடான நிலப்பரப்பில் வழி தவறி இருவரும் பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என்று அம்போரா காவல் நிலைய உதவி ஆய்வாளர் மங்கேஷ் சல்வே தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.