அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் படகு 
இந்தியா

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் படகு! 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் படகில் இருந்து 6,016 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

DIN

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் நாட்டுப் படகில் இருந்து 6,000 கிலோவுக்கும் அதிகமாக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் நாட்டு மீன்பிடி படகில் இருந்து 6,016 கிலோகிராம் மெத்தம்பேட்டமைனை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியது. இதுவரை இந்திய கடற்படையால் மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் இதுவாகும்.

இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், போதைப்பொருள் கடத்திவந்த படகை இடைநிறுத்துவதற்காக கடற்படை விமானம் மற்றும் கடற்படை பாதுகாப்பு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

படகில் இருந்த 6 பேர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். படகில் இருந்த மெத்தம்பேட்டமைன் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசியை மீட்டு அதிகாரிகள் விசாரணைக்காக அந்தமான் தலைநகர் ஸ்ரீவிஜயபுரத்திற்கு கொண்டு சென்றனர்.

அந்தமான் கடலில் சமீபகாலமாக ரோஹிங்கியா படகுகள் மற்றும் மியான்மர் நாட்டுப் படகுகள் அதிகளவில் இந்திய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திவருவது அதிகரித்துள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT