கோப்புப்படம். 
இந்தியா

விமான நிறுவனங்களுக்கு 994 வெடிகுண்டு மிரட்டல்கள்- மாநிலங்களவையில் தகவல்

இந்தியாவில் விமான நிறுவனங்களுக்கு நடப்பாண்டு நவம்பா் 13-ஆம் தேதி வரையில் 994 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதுபோன்ற போலியான அழைப்புகளை கண்டறியும் திறன்மிக்க அமைப்புமுறை செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Din

இந்தியாவில் விமான நிறுவனங்களுக்கு நடப்பாண்டு நவம்பா் 13-ஆம் தேதி வரையில் 994 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதுபோன்ற போலியான அழைப்புகளை கண்டறியும் திறன்மிக்க அமைப்புமுறை செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தும் வகையில் வரும் போலியான அழைப்புகளை தடுக்கும் வகையில், பொது விமானப் போக்குவரத்து சட்டம் 1982, விமான பாதுகாப்பு விதிகள் 2023 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2022, ஆகஸ்ட் மாதத்திலிருந்து, நடப்பாண்டு நவம்பா் 13-ஆம் தேதிவரை 1,143 போலி குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகள் மூலம் மிரட்டல் வந்துள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் முரளிதா் மோஹோல் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவித்தாா்.

‘இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு சமீபத்தில் போலியான வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகளே வந்துள்ளன. இந்த அழைப்புகளால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற போலியான அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்காக வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக் குழு (பிடிஏசி) அனைத்து விமான நிலையங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும், சட்டவிரோத தலையீடுகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு வழிமுறைகளை ஒழுங்குபடுத்துமாறு பிடிஏசி அறிவுறுத்தியுள்ளது’ என்று தனது பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT