தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  
இந்தியா

காந்தி, லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி (அக்டோபர் 2) அவர்களது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

DIN

புதுதில்லி: மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி (அக்டோபர் 2) அவர்களது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான 'காந்தி ஜெயந்தி' இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடி அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் "மதிப்பிற்குரிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினேன்.

மேலும் இதே நாளில் பிறந்த நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் மரியாதை செலுத்தினேன்.

தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் காந்தி, உண்மை மற்றும் அகிம்சை கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றி, உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களின் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கின்றது.

மேலும் அவரது வாழ்க்கை,உண்மை,நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கொள்கைகள் நாட்டு மக்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் அளிக்கின்றது என்று மோடி தெரிவித்தார்.

மேலும் "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" என்ற முழக்கத்தை எழுப்பிய லால் பகதூர் சாஸ்திரி தனது வாழ்க்கையை நாட்டின் வீரர்கள், விவசாயிகளுக்காக அர்ப்பணித்தவர், அவரது எளிமை மற்றும் நேர்மை அவருக்கு பெரும் மரியாதையைப் பெற்று தந்தது. அவரது நற்பண்புகள் மற்றும் கொள்கை அடிப்படையிலான அவரது வாழ்க்கை, மக்களுக்கு சேவை செய்யவும், நாட்டிற்காக அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றது" என மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

புதிய வருமான வரி விதிகள்: டிசம்பருக்குள் அறிவிக்கை

சி.பி.ராதாகிருஷ்ணன் - சுதா்சன் ரெட்டி இடையே நேரடி போட்டி

வேளாண்மையில் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT