கோப்புப் படம் 
இந்தியா

மேற்கு வங்கம்: ஜேசிபி மோதி சிறுவன் பலி! போராட்டக்காரர்களைத் தாக்கிய திரிணமூல் கட்சியினர்!

மோசமான சாலையால்தான் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

DIN

மேற்கு வங்கத்தில் ஜேசிபி மோதி சிறுவன் பலியான சம்பவத்தில் போராட்டக்காரர்களை திரிணமூல் கட்சியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெற்கு கொல்கத்தாவின் பன்ஸ்ட்ரோனி பகுதியில் புதன்கிழமை (அக். 2) காலையில் டியூஷன் சென்று கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவர் மீது ஜேசிபி வாகனம் மோதியது. இதனையடுத்து, சிறுவனை அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இருந்தபோதிலும், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஜேசிபியின் ஓட்டுநர், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்; அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தின் காரணங்களாக சாலையின் மோசமான நிலை, தாமதமாகும் புனரமைப்பு பணி, காவல்துறையினரின் அலட்சியம் முதலானவைதான் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சிறுவனின் உயிரிழப்புக்கு அரசின் அலட்சியக் கொலை என்று பெயரிட்டதுடன், அப்பகுதியின் கவுன்சிலர், எம்.எல்.ஏ.வையும் நேரில் வருமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

கைகலப்பாக மாறிய இந்த போராட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாகவும், பெண் ஒருவரை காவல் அதிகாரி கீழே தள்ளிவிட்டதில், பெண் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நிலத்தடி வடிகால் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதால்தான், சாலையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் முடிக்கப்படும் என்று கவுன்சிலர் அனிதா கர் மஜும்தர் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT