தில்லி மருத்துவமனை PTI
இந்தியா

தில்லி மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக் கொலை!

தில்லியில் மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி...

DIN

தில்லி மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மருத்துவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது?

தில்லி ஜெய்த்பூர் பகுதியில் அமைந்துள்ள நீமா மருத்துவமனைக்கு புதன்கிழமை நள்ளிரவில் இரண்டு பேர் விபத்து ஏற்பட்டதாக காயங்களுடன் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் மருத்துவர் ஜாவேத்தை சந்திக்க வேண்டும் எனக் கூறியதை தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் அவரது அறைக்கு இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவர் ஜாவேத்தின் அறைக்குள் நுழைந்தவுடன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இருவரும் தப்பி ஓடியதாக மருத்துவமனை ஊழியர்கள் முதல் கட்டத் தகவலை பகிர்ந்துள்ளனர்.

ஏற்கெனவே, கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்ற பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.

இரண்டு மாதங்களாக மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், தில்லியில் மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT