மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் - நாடாளுமன்ற கட்டடத்தின் பின்பு உள்ள பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை 
இந்தியா

நாடாளுமன்றத்தின் முன்பு இருந்த காந்தி சிலை இடமாற்றம்: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்

DIN

புதுதில்லி: நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லியில் நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகள் கட்டடத்தின் பின்பு உள்ள பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"நாடாளுமன்றத்தின் முன்புற வாசலின் முன்னே இருந்த உனது திருவுருவச் சிலை இப்பொழுது பின்புற வாசலுக்கும் பின்னே வைக்கப்பட்டுள்ளது.

பாசிஸ்டுகள் அவைக்குள் வருகிற பொழுது உன் முகத்தில் முழிக்கக்கூடாதென நினைக்கிறார்கள்.

நீ அல்லவோ எம் தேசத்தின் தந்தை. வாழ்க நீ எம்மான். என்றென்றும் வணங்குகிறோம் உன்னை" என அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமருடன் கேரள முதல்வர் சந்திப்பு: நிவாரண நிதி விடுவிக்கக் கோரிக்கை!

ஆட்டோ அப்டேட்.. சைத்ரா ஆச்சர்!

பிக் பாஸ் சென்ற கமுருதீன்... மகாநதி தொடரில் திடீர் திருப்பம்!

பொன்ராம் இயக்கும் சண்முக பாண்டியனின் கொம்புசீவி: டீசர் தேதி!

இருமல் மருந்து மரணங்கள்: நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT