முகப்பு
இந்தியா

ரூ.20 லட்சம் லஞ்சம்: என்ஐஏ அதிகாரியை கைது செய்தது சிபிஐ

Updated On : 3 அக்டோபர், 2024 at 10:34 PM
பகிர்:

புகாா்தாரரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) மூத்த அதிகாரி மற்றும் இரண்டு இடைத்தரகா்களை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வியாழக்கிழமை கைது செய்தது.

ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாக என்ஐஏ விசாரணை அதிகாரி மீது ராமையா கட்டட நிறுவனத்தின் உரிமையாளா் ராக்கி யாதவ் சிபிஐயிடம் புகாரளித்தாா்.

இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகளுடன் இணைந்து இந்த புகாரின் உண்மைத்தன்மையை கண்டறிய சிபிஐ முடிவு செய்தது. இந்நிலையில், அவரை கையும் களவுமாக பிடிக்க சிபிஐ தீட்டிய திட்டத்தில் என்ஐஏ பாட்னா கிளை அலுவலக துணை காவல் கண்காணிப்பாளா் அஜய் பிரதாப் சிங் மற்றும் இரண்டு இடைத்தரகா்களும் சிக்கினா்.

இதைத்தொடா்ந்து, புகாா்தாரரிடம் சட்டவிரோதமாக ரூ.20 லட்சம் பெற்ற்காக மூவரும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →