கோப்புப்படம். ENS
இந்தியா

6 வயது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி வேன் ஓட்டுநர்!

புணேவில் 6 வயது பள்ளி சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி வேன் ஓட்டுநர் கைது.

DIN

புணேவில் 6 வயது பள்ளி சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பள்ளி வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் வான்வாடி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் சிறுமிகள் இருவர், பள்ளி முடிந்து வழக்கமாகச் செல்லும் வேனில் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

அப்போது வேன் ஓட்டுநர், சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். வீட்டிற்கு சென்றபின்னர் சிறுமிகளில் ஒருவர் தனது தாயிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதன்படி சிறுமியின் தாயார் உடனடியாக பள்ளி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட வேன் ஓட்டுநர் சஞ்சய் ரெட்டி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 64 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 65 (2) (12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், நான்கு வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் பெற்றோர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் ஷிண்டே கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பெண்களுக்கு எதிராக, குறிப்பாக சமீபத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக பதிவாகி வருகிறது. இது பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT