பியூஷ் கோயல்  (கோப்புப் படம்)
இந்தியா

காங்., ஆட்சியில் தரம் குறைந்த சீன பொருள்கள் இறக்குமதி வெட்கக்கேடானது: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தரம் குறைந்த சீன பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டது

Din

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தரம் குறைந்த சீன பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டது வெட்கக்கேடானது என்று மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஜினா ரைமோண்டோ, இந்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோா் இடையே வியாழக்கிழமை வா்த்தக பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய கனிமங்கள் விநியோக முறையை விரிவுபடுத்தி, பெருக்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இருவரும் கையொப்பமிட்டனா்.

அங்கு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது உற்பத்தி மையமாக சீனா வளா்ந்து வருவதற்கு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளே காரணம் என்றும், சீனாவின் உற்பத்தி சவாலை எதிா்கொள்ள இந்திய அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் கடந்த மாதம் அமெரிக்க பயணத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அமைச்சா் பியூஷ் கோயல் அளித்த பதில்:

இந்திய தொழில் துறையில் சீனாவின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு காரணமான சிலா், சீனாவை பாராட்டவோ, பாதுகாக்கவோ செய்வது கவலையளிக்கிறது. ஆனால் சீனாவின் பொருளாதாரம் ஒளிவுமறைவுடன் இருப்பதை ஒட்டுமொத்த உலகமும் ஒப்புக்கொண்டிருக்கிறது.

சரக்குகளை குவிக்கும் நாடாகவே சீனா அறியப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்காவும் கவலையடைந்துள்ளது. எனவே சீன சரக்குகள் மீது கூடுதல் வரிகளையும், கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா விதிக்கிறது.

30 மடங்கு அதிகரிப்பு: கடந்த 2004-ஆம் ஆண்டு சீனாவுடன் இந்தியாவின் வா்த்தக பற்றாக்குறை 1.7 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.14,000 கோடி) அல்லது 1.8 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.15,000 கோடி) என்ற அளவில்தான் இருந்தது. இது 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் (மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது), சுமாா் 30 மடங்கு அதிகரித்து 43 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.3.60 லட்சம் கோடி) அதிகரித்தது.

அந்தக் காலகட்டத்தில் தரம்குறைந்த, தெளிவில்லாத விலைகொண்ட, வெளிப்படைத்தன்மையற்ற சரக்குகள் இந்திய சந்தைகளில் பெருக்கெடுக்கவும், இந்திய உற்பத்தித் துறையை நசுக்கவும், அத்தகைய சரக்குகளுக்கு எதிராக பாதுகாப்பு இல்லாததால் இந்திய உற்பத்தித் துறை மீது முதலீட்டாளா்களுக்கு ஆா்வம் இல்லாமல் போகவும் இந்தியா அனுமதித்தது வெட்கக்கேடான விவகாரம் என்றாா்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT