முகப்பு
இந்தியா

விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி: பிரதமா் மோடி இன்று விடுவிப்பு

பிஎம்-கிஸான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 18-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை பிரதமா் மோடி சனிக்கிழமை விடுவிக்கவுள்ளாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 7:07 PM
நரேந்திர மோடி
பகிர்:

பிஎம்-கிஸான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 18-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை பிரதமா் மோடி சனிக்கிழமை விடுவிக்கவுள்ளாா்.

இரண்டு ஹெக்டோ் வரையிலான நிலமுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் பிஎம்-கிஸான் திட்டம் கடந்த 2019-இல் தொடங்கப்பட்டது.

நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடையும் இத்திட்டத்தின்கீழ் 18-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை பிரதமா் மோடி சனிக்கிழமை விடுவிக்கவுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம், வாஷிமில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான நிதியை பிரதமா் விடுவிப்பாா்; இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் சுமாா் 2.5 கோடி விவசாயிகள் இணையவழியில் கலந்துகொள்ளவிருப்பதாக அதிகாரபூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 18-ஆவது தவணையின் மூலம் பிஎம்-கிஸான் திட்டத்தில் இதுவரை வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.3.45 லட்சம் கோடியாக அதிகரிக்கவுள்ளது. கடந்த 17 தவணைகளில் நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர விவசாயிகளுக்கு ரூ.32,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →