திருப்பதி தங்கக் கொடிமரத்தில் சேதம்?
கொடியேற்றத்துக்கான ஆயத்தப் பணியின்போது கொடிமரத்தின் வளையம் சேதமடைந்ததாக தகவல்
திருப்பதி பிரம்மோற்சவ கொடியேற்றத்துக்கான ஆயத்தப் பணியின்போது கொடிமரத்தின் வளையம் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று (அக். 4) கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 12 ஆம் தேதி வரையில் போடா என்ற பெயரில் பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது.
மேலும், திருப்பதி ஏழுமலையானுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். இந்த நிலையில், கொடியேற்றத்துக்கான கயிறை கொடிமரத்தின் உச்சியில் பொருத்தும் பணியின்போது தங்க கொடிமரத்தின் வளையம் உடைந்ததாகவும், அதனைச் சரிசெய்யும் பணியில் தேவஸ்தான அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.