இந்தியா

‘ட்ரோன் தாக்குதலை சமாளிக்கும் திறன் கொண்டது பிஎஸ்எஃப்’

சட்டவிரோத ஊடுருவல், ட்ரோன் தாக்குதல் மற்றும் கடத்தல்களை சமாளிக்கும் திறன் கொண்டது பிஎஸ்எஃப்.

Din

சட்டவிரோத ஊடுருவல், ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் மற்றும் கடத்தல்களை சமாளிக்கும் திறன் கொண்டது எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) என்று அதன் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

பிஎஸ்எஃப் உதவி கமாண்டன்ட்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மத்திய பிரதேசத்தின் குவாலியா் மாவட்டத்தில் உள்ள தேகன்பூா் பிஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தல்ஜித் சிங் சௌதரி பேசியதாவது:

நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் பணியில் பிஎஸ்எஃப் படையினா் ஈடுபடுத்தப்படுகின்றனா். சட்டவிரோத ஊடுருவல், ட்ரோன் தாக்குதல் மற்றும் கடத்தல் போன்றவற்றை முழமையாக சமாளிக்கும் திறன் கொண்டது பிஎஸ்எஃப். நக்ஸல்களுக்கு எதிரான பிஎஸ்எஃப் போராட்டத்திலும் தொடா் வெற்றிகள் கிடைத்து வருவது ஊக்கமளிக்கிறது.

தேகன்பூா் பயிற்சி மையம் பிஎஸ்எஃப் படையின் வரலாறு, தியாகம் மற்றும் பெருமையைக் கொண்டது. 52 வாரங்கள் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும் இந்த பயிற்சி மையத்தில் இருந்து 4 பெண் அதிகாரிகள் உள்பட 77 அதிகாரிகள் சனிக்கிழமை தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த துணிச்சலான இளம் அதிகாரிகள் விரைவில் நாட்டின் எல்லைகளை பாதுகாக்க களத்தில் இறக்கப்படுவாா்கள் என்றாா்.

குழந்தைகள் நலக் குழு காலிப் பணியிடம்: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

காவல்துறை நடவடிக்கை: பிரேஸிலில் 121 போ் உயிரிழப்பு

உயா் சிறப்பு மருத்துவம்: சோ்க்கை விவரங்களை உறுதி செய்ய என்எம்சி அறிவுறுத்தல்

மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை! - டாஸ்மாக் நிா்வாகம் எச்சரிக்கை

தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வாா் அவதார விழா தேரோட்டம்

SCROLL FOR NEXT