மணக்கோலத்தில் வாக்களித்த நபர் 
இந்தியா

மணக்கோலத்தில் வாக்களித்த பின் திருமணம் செய்த மணமகன்!

திருமணக்கோலத்தில் வாக்களித்த நபரால் பரபரப்பு..

பிடிஐ

சண்டீகர்: குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் திருமணக்கோலத்தில் வாக்களித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்று வருகின்றது. தேர்தல் மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது. தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றுள்ளனர். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குருக்ஷேத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மணமகன் திருமணத்திற்கு முன்பு தனது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று திருமண உடையிலேயே முதலில் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்து விட்டு பின்னர் திருமணம் செய்துகொள்ள சென்றுள்ளார்.

லத்வா சட்டமன்றத் தொகுதியில் மணமகன் சுனில் குமார் வாக்களித்தார். இதுதொடர்பாக அவர் கூறியது, வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். யாரும் தங்கள் வாக்குகளை வீணடிக்காதீர்கள்.

நான் வாக்களித்தப் பிறகு திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். என்னுடைய திருமணத்திற்கு தாமதமாக வந்தாலும், வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

ஹரியாணா மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அதிகளவில் வாக்களிக்குமாறு குமாரின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை முதல்வர் நயாப் சிங் சைனி, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர்.

ஆளும் பாஜக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறுகிறது அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT