மேகாலயத்தில் வெள்ளம், நிலச்சரிவு 
இந்தியா

மேகாலயத்தில் வெள்ளம், நிலச்சரிவு: 10 போ் உயிரிழப்பு

மேகாலயத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

Din

மேகாலயத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

மேகாலயத்தில் காரோ மலைப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் அதீத கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக, தெற்கு காரோ மலை மாவட்டத்தில் கசுவபுரா பகுதியில் உள்ள தொலைதூர கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்தனா். இவா்களில் 3 போ் சிறாா்களாவா்.

இதேபோல், மேற்கு காரோ மலை மாவட்டத்தில் உள்ள டாலு பகுதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்.

மாநிலத்தில் மழை-வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வா் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளாா். காரோ மலையில் உள்ள 5 மாவட்டங்களில் வெள்ளச் சூழல் குறித்து அதிகாரிகளுடன் காணொலி முறையில் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

டாலு பகுதியில் வெள்ளத்தில் முக்கியமான பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு மீட்புப் படையினா் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆயத்த இரும்புப் பால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் யோசனை தெரிவித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

குஜராத் - மதுரை இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள்!

சாலையில் கிடந்த 7 பவுன் நகைகள் போலீஸாரிடம் ஒப்படைப்பு

இணையவழியில் பொதுமக்கள் இழந்த ரூ.1.37 கோடி மீட்பு!

கோவையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு விரைவு ரயில்கள்

தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT