தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸாக பதிவு!
தலைநகர் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
புதுதில்லி: தலைநகர் தில்லியில் சனிக்கிழமையன்று அதிகபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவ கால சராசரியை விட ஒரு டிகிரி அதிகமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே வேளையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி அதிகரித்து 23.2 டிகிரி செல்சியஸாக உள்ளது.
காற்றில் ஈரப்பதம் 83 முதல் 50 சதவிகிதம் வரை உள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Advertisement
Advertisement
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மாலை 4 மணியளவில் காற்றின் தரக் குறியீடு எண் 126 பதிவானால் இது மிதமான பிரிவில் உள்ளது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.