படம் | விமானப்படை எக்ஸ் தளம்
இந்தியா

வீரத்துக்குச் சான்றாகத் திகழும் விமானப்படை! பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

விமானப்படை நாள்: விமானப்படை வீரர்களை வாழ்த்தி பிரதமர் மோடி பதிவு...

DIN

உலகளவில் திறன் வாய்ந்த விமானப்படை அமையப்பெற்ற நாடுகளில் நம் பாரத தேசமும் ஒன்றாக திகழ்கிறது. விமானப்படை வீரர்களைப் போற்றி கௌரவிக்கும் விதமாக அக்டோபர் 8-ஆம் தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய விமானப்படையின் வீரர், வீராங்கனைகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். உங்களுடைய ஒப்பில்லா அர்ப்பணிப்பு, நமது வான்பரப்புகளை பாதுகாக்கிறது. உங்களுடைய தன்னலமற்ற சேவைக்கும் தியாகங்களுக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.

ஜெய்ஹிந்த்! எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, துணிச்சல் மிகுந்த நம் வீரர்களுக்கு விமானப்படை நாள் வாழ்த்துகள். வீரத்துக்கும் தொழில்முறை நடவடிக்கைகளுக்கும் சான்றாக நமது விமானப்படை விளங்குகிறது. நம் நாட்டை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு அளப்பரியது எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பும், விமான சாகச நிகழ்ச்சியும் இன்று(அக். 8) காலை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

SCROLL FOR NEXT