இந்தியா

வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!

தேர்தலில் வெற்றிபெற்ற வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

தேர்தலில் வெற்றிபெற்ற வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் தனது வெற்றியைப் பதிவு செய்தார்.

ஜம்மு-காஷ்மீர்: இந்தியா கூட்டணி வெற்றியாளர்களில் 2 பேர் ஹிந்துக்கள்!

இதுகுறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வினேஷ் போகத்தை வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத் ஹரியாணாவில் ஜூலானா சட்டபேரவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் நலனுக்காகத் தொடர்ந்து உழைப்பேன்: மோடி

மக்களுக்கான பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் அவர் சிறப்பான வெற்றிபெற வாழ்த்துகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக அவரது ஆற்றல் தொடரட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாஜகவின் யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வினேஷ் போகத் 65,080 வாக்குகளும், யோகேஷ் குமார் 59, 065 வாக்குகளும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் சுரேந்தர் 10,158 வாக்குகளும் பெற்றனர். ஆம் ஆத்மியின் கவிதா ராணி 1,280 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

சாதனை படைத்த சிங்கம் பட டிரைலர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT