கேரளத்தில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரிக்கை 
இந்தியா

கேரளத்தில் கனமழை நீடிக்கும்: ஐஎம்டி எச்சரிக்கை

கேரளத்தின் பல பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) திங்கள்கிழமை எச்சரித்தது.

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தின் பல பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) திங்கள்கிழமை எச்சரித்தது.

கேரளத்தின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. பத்தினம்திட்டா, கோட்டையம், இடுக்கி மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், கசரகோடைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மேலும், அடுத்த ஐந்து நாள்களுக்கு கேரளத்தின் பல பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என ஐஎம்டி தெரிவித்தது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் ஐஎம்டி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கண்ணூர் விமான நிலையத்தில் 93 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் தானியங்கி மழை அளவீடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அனக்காயம் பகுதியில் 71 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரம்பரிய உணவுகளுடன் உணவுத் திருவிழா: நாளை தொடக்கம்! முழு விவரம்!

Middle Class Movie Review | கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம் | MunishKanth

மதுரையின் வளர்ச்சிக்கு எதிரான தடைகளைத் தகர்த்தெறிவோம்! - முதல்வர் ஸ்டாலின்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் மாநாடு: பிரேமலதா

சென்னையில் 2 மாதங்களுக்குள் வருகிறது டபுள் டக்கர் பேருந்து?

SCROLL FOR NEXT