சத்தீஸ்கரில் ஒருவர் கொலை 
இந்தியா

சத்தீஸ்கரில் காவல் உளவாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் கொலை!

இந்தாண்டு மட்டும் இதுவரை 51 பேரை நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர்..

பிடிஐ

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் காவல் உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவரை நக்சல்கள் கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போபால்பட்டினம் காவல நிலைய எல்லைக்குள்பட்ட போஷன்பள்ளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் கன்ஹையா டாட்டி(55) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரித்தார்.

முதல்கட்ட தகவலின்படி, நக்சலைட்டுகள் போஷன்பள்ளியில் வசிக்கும் டாட்டியை அழைத்துச் சென்று, காவல் உளவாளியாகச் செயல்பட்டதாகக் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி அவரைக் கொன்றனர்.

தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க போலீஸார் குழு அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இந்த சம்பவத்துடன், பிஜப்பூர் உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவின் தனித்தனி இடங்களில் இந்தாண்டு மட்டும் இதுவரை 51 பேரை நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT