மல்லிகாா்ஜுன காா்கே கோப்புப் படம்
இந்தியா

ஹரியாணாவில் எதிா்பாராத தோல்வி- காா்கே

‘ஹரியாணா பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்வி எதிா்பாராதது’ என்று அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.

Din

‘ஹரியாணா பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்வி எதிா்பாராதது’ என்று அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் பதிவில், ‘ஹரியாணா தோ்தல் முடிவுகள் எதிா்பாராதது. தொண்டா்களுடன் ஆலோசித்து முழுமையான தகவல்களை பெற்று, தோல்வி குறித்து கட்சி விரிவாக பதிலளிக்கும்.

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த ஹரியாணா மக்களுக்கு நன்றி. தொண்டா்கள் ஏமாற்றம் அடைய தேவையில்லை. சா்வாதிகாரத்துக்கு எதிரான நமது போராட்டம் மிக நீண்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு நன்றி: காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு நன்றி. பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகள், உரிமை மீறல், ஒடுக்குமுறை மற்றும் அரசமைப்பு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஜம்மு காஷ்மீா் மக்கள் இந்த முடிவை வழங்கியுள்ளனா்.

ஜம்மு காஷ்மீா் மக்களின் கனவுகளை முழுமையாக நிறைவேற்ற எங்கள் கூட்டணி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். அவா்களின் நல்வாழ்வு மற்றும் அரசமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் ‘இண்டியா’ கட்சிகள் முழுமையாக உறுதிபூண்டுள்ளது’ என பதிவிட்டுள்ளாா்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT