பிரதமருடன் முதல்வர் நயாப் சிங் சைனி சந்திப்பு 
இந்தியா

பிரதமர் மோடியுடன் ஹரியாணா முதல்வர் சந்திப்பு!

முதல்வர் நயாப் சிங் சைனி பிரதமர் நரேந்திர மோடியை தேசிய தலைநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

பிடிஐ

ஹரியாணாவில் ஹாட்ரிக் வெற்றியை பாஜக பதிவு செய்த நிலையில், முதல்வர் நயாப் சிங் சைனி தேசிய தலைநகரில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

பிரதமர் மோடிக்கு ஹரியாணா முதலவர் சைனி அழகான கிருஷ்ணர் சிலையைப் பரிசாக வழங்கினார்.

நயாப் சிங் சைனியை முதலமைச்சராக பாஜக அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் செவ்வாயன்று தெரிவித்ததால், கட்சியின் நாடாளுமன்றக் குழு இறுதி முடிவை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் வெற்றிக்கு முதல்வர் சைனிக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தார்.

ஹரியாணா மாநிலத்தில் பாஜக தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றதையடுத்து மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்காக பாஜகவுக்கு மீண்டும் மக்கள் வாக்களித்ததாகக் கூறினார்.

முதல்வர் சைனி பிரதமருக்கு அளித்த கிருஷ்ணர் சிலை

90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 48 இடங்களையும், காங்கிரஸ் 37 இடங்களையும் கைப்பற்றியது. இதையடுத்து ஹரியாணாவில் முதல்வராக நயாப் சிங் சைனி விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் நிறுவன காவலருக்கு மிரட்டல்: சிறாா் உள்ளிட்ட 3 போ் கைது

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

SCROLL FOR NEXT