ராகுல் காந்தி, ஒமர் அப்துல்லா கோப்புப்படம்
இந்தியா

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி! இந்தியா கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.

DIN

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்த ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸின் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

“அமோக வெற்றி பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கும் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள். இது இந்தியாவுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி.

மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த மாநிலத்தின் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் மீட்டெடுப்பதற்கான மக்களின் முடிவு. ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையை விதைக்கு தருணம் தொடங்கியுள்ளது.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

SCROLL FOR NEXT